தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பா.ஜ.க தரப்பிலிருந்தும், வலதுசாரி அமைப்புகள் தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் தற்போது டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழு ஒன்று, டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜியிடம், உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகக் கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com