பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு நேரமில்லை. உலக வரலாற்றிலேயே ஒரு பிரதமரை நாடாளுமன்றத்துக்கு வரவைப்பதற்குக்கூட போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலை நம்முடைய இந்திய நாட்டில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக வாழ்ந்து வருவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆம், தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மக்களும் கலைஞரின் குடும்பம்தான். ஆனால், பிரதமரால் இந்திய நாட்டில் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான் சொகுசாக வாழ்ந்து வருகிறது. அது அதானியின் குடும்பம் மட்டும்தான்…! இந்திய நாட்டையே பங்கு போட்டு, அதானிக்கு மோடி அரசாங்கம் விற்று வருகிறது. அதானி, இந்திய நாட்டிலுள்ள, ரயில்வே, துறைமுகம், சாலைப் போக்குவரத்து போன்ற, அவர் கால் பதிக்காத துறையே இல்லை. இதை அனைத்தையும் அதானிக்கு தாரை வார்த்தது இந்திய பிரதமர் மோடிதான்.
எனவே, இவற்றுக்கெல்லாம் முடிவுகட்ட இளைஞரணியைச் சேர்ந்த இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒன்றிய மோடி அரசாங்கத்தைப் பற்றியும், அடிமை அ.தி.மு.க-வைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் `இந்தியா” கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும். எப்படி 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை தி.மு.க கூட்டணி பெற்றதோ..! அதே போன்ற ஒரு வெற்றியை வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் `இந்தியா’ கூட்டணி பெற வேண்டும். அதற்கு நமது இளைஞரணியைச் சேர்ந்த தம்பிகள் அயராது உழைக்க வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com