ரஷ்யா – உக்ரைனுக்கிடையே ஒரு வருடத்துக்கும் மேலாகப் போர் நடந்துவருகிறது. பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. போர் இல்லாத அமைதியான சூழல் உருவாகும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் கரைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்துவதும் என இரு நாடுகளுக்குமிடையே போர் வெப்பம் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. ரஷ்யத் தலைநகரான மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஒரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா ஆகிய பகுதிகளிலும், மேற்கு ப்ஸ்கோவ் பகுதியிலுள்ள விமான நிலையத்தையும் ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்கியிருக்கிறது. இதனால், பல இடங்களில் தீ பரவியிருக்கிறது. குறிப்பாக ப்ஸ்கோவ் விமான நிலையத்தின் பெரும்பகுதி தீயில் கருகியது. இந்தத் தாக்குதலில், நான்கு Il-76 ரக போக்குவரத்து விமானங்கள் தீப்பற்றியிருக்கின்றன.
நன்றி
Publisher: www.vikatan.com