காலி பணியிடங்களுக்கு பதிவு செய்த 50 இலட்சம் பேரில், 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பெண்களுக்கு 12,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கு 15 லட்சம் பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தனர்.
காலிப்பணியிடங்கள் நிரப்பும் இந்த இணையவழி பதிவு நடைமுறைகள் கடந்த ஆண்டு டிசம்பர் 27, 2023 இல் தொடங்கி, கடந்த செவ்வாய்க்கிழமை 16.01.2024 அன்று இரவு 12.00 மணியோடு நிறைவடைந்திருக்கிறது.
பிறகு விண்ணப்பங்களை திருத்தம் செய்தல், விடுபட்ட கட்டணங்களை செலுத்துதல், அத்தோடு விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்யவிருப்புவோர் ஜனவரி 20-ம் தேதி வரை செய்துகொள்ளலாம் என்றும், `அதிகபடியான விண்ணப்பங்கள் பெறப்பட்டது அரசாங்க பணி மீது இளைஞர்கள் கொண்டுள்ள மோகத்தையும், காவல்துறையில் சேருவதில் இளைஞர்களிடம் உள்ள வலுவான ஆர்வத்தை பிரதிபலிப்பதாக’ UPPRPB தலைவர் டிஜி ரேணுகா மிஸ்ரா தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com