அதேபோல, குடியரசுக் கட்சியின் மற்ற வேட்பாளர்களான, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ்(Ron DeSantis) மற்றும் முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி(Nikki Haley) ஆகியோர் தலா 11% ஆதரவையே குடியரசுக் கட்சியினரால் பெற்றிருக்கின்றனர். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வம்சாவளி வேட்பாளரான தொழிலதிபர் விவேக் ராமசாமி வெறும் 5% ஆதரவை மட்டுமே பெற்றிருக்கிறார். தவிர, நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி 2% ஆதரவி பெற்றிருக்கிறார். இதில் 8% குடியரசுக் கட்சியினர் தங்கள் ஆதரவு யாருக்கு என்பது பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை என தெரிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்(Wall Street Journal) வரும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் `ஜோ பைடனா, டொனால்டு டிரம்பா” என ஒப்பிட்டு சர்வே நடத்தியது. இந்த சர்வேயின் முடிவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை விட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம் 4% புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதாவது, பைடன் 43% ஆதரவும், டிரம்ப் 47% ஆதரவையும் பெற்றிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் சர்வே முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
டொனால்டு டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பைடனுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுகள், பைடன் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன் ஹண்டர் பைடன் செய்த வரி ஏய்ப்பு மற்றும் அதை அவர் தடுக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில், இருவருமே தங்களுக்கான ஆதரவைப் பெறும் முயற்சியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com