திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை அடுத்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இரு முறை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அடுத்தமாதம் 23-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read >> 10th, Diploma, Degree படிச்சவங்களே… மாவட்ட சமூக நல அலுவலகத்தில வேலை தராங்களாம்! தமிழக அரசு ஜாப்ல ஜாயின் பண்ண ரெடியா?
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.
மேலும் இந்த 10 நாட்களும் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.அந்த வகையில் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சமும், இலவச தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் வருகிற 10 ம் தேதி ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
நன்றி
Publisher: jobstamil.in