நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தனி உதவியாளர் ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான செய்திக்கு வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் என்பவர் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார். கேரளாவின் விழிஞ்சம் கடற்கரையில் ஏகே 47 மற்றும் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார். இவர் நடிகையின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அவர் பணத்தை படங்களில் முதலீடு செய்துள்ளார், மேலும் இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
ஆதிலிங்கத்துடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய வரலட்சுமி சரத்குமாருக்கு கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் என்.ஐ.ஏ. தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான செய்திக்கு நடிகை வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பின் எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை; என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பவில்லை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com