விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் “வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. விசிக-வின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்கள்.
இந்த மாநாட்டிற்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலத்தில், 500 மீட்டர் அகலம், 1000 மீட்டர் நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடல் அருகே ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டுத் திடலின் பின்புறம், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com