கழுகார் அப்டேட்ஸ்: ‘உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்!’

குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. ‘சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே வருகிறார்’ என்று சொல்லித்தான் இந்த வேட்டை நடக்கிறதாம்.
” அகில இந்திய தலைமையிடம் ‘டேட்’ வாங்காமலேயே வசூல் வேட்டை நடத்துகிறார்களே… இதைக் கேட்க நாதியில்லையா?” என்று ஒரு குரூப் சத்தியமூர்த்தி பவனில் முறையிட்டிருக்கிறது.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்…
* ‘உண்ணாவிரதம்’ – ரிப்போர்ட் கேட்ட அன்பகம்
* கார்கே…” – வசூல் வேட்டையில் கதர்கள்!
* ‘புரட்சித் தமிழரா… புளியோதரைத் தமிழரா?’
* “உங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள்…” – கலக்கத்தில் அமைச்சர்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
69வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப் பட்டியல்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதற்கான் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளின் போட்டியில் ஜெய்பீம், சர்ப்பட்டா பரம்பரை, கர்ணன், ஆர்,ஆர்,ஆர், கங்குபாய் கத்யாவாடி, தி காஷ்மீர் பைல்ஸ், மின்னல்முரளி, தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், விருது வென்றவர்களின் முழுப்பட்டியலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
செஸ் உலக கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வி!
அஜர்பைஜானின் பகுவில் நடைபெற்ற FIDE உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கார்ல்சனை எதிர்த்து ஆடியவர் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளும் டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இன்று நடந்தது.
கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைப்பாரா என்று ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கார்ல்சனிடம் போராடி தோற்றார் பிரக்ஞானந்தா.
போட்டி குறித்த முழுமையான அப்டேட்ஸை படிக்க இங்கே க்ளிக் செய்க…
———
பிரக்ஞானந்தா, கார்ல்சன் இருவருக்குமான பரிசுத் தொகை இதுதான்!| FIDE WorldCup
அண்ணாமலையின் நடைபயணம்: சிக்சரா… சொதப்பலா?

‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை ஜூலை 28-ல் தொடங்கினார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு, முதற்கட்ட பயணத்தை ஆகஸ்ட் 22-ம் தேதி நிறைவு செய்திருக்கிறார்.
முதற்கட்ட நடைபயணத்தில் சிக்சர் அடித்திருக்கிறாரா… சறுக்கியிருக்கிறாரா..?
விசாரணையில் கிடைத்த தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
I.N.D.I.A: மும்பையில் 3-வது கூட்டம்; 5 முதல்வர்கள், 80 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
இந்த மாதம் 31, செப்டம்பர் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள், மூன்றாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
உறவின் மொழி – வானதி சீனிவாசன் பற்றி கணவர் சீனிவாசன்!

வானதி சீனிவாசனின் கணவர் என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் வழக்கறிஞர் சீனிவாசன். பெயரோடு மட்டுமல்ல நிஜத்திலும் வானதியின் வெற்றிக்குப் பின்னால் நிற்பவர் சீனிவாசன்.
பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என ‘பேர் சொல்லும் மனைவி’ யாக வளையவரும் வானதி சீனிவாசனின் அரசியல் அர்ப்பணிப்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் பாங்கு, குடும்பத்தலைவியாக மிளிரும் இயல்பு என தான் வியந்த குணங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
படிக்க இங்கே க்ளிக் செய்க…
புதினுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ‘வாக்னர்’ குழுத் தலைவர் விமான விபத்தில் பலி!

ரஷ்யாவில் ராணுவத்துக்கு உதவும் தனியார் ராணுவமான ‘வாக்னர் குழு’ தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் உள்ளிட்ட ஒன்பது பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
அதானி நிறுவனத்துக்கு ரூ.55,000 கோடி இழப்பு… முதலீட்டாளர்கள் அலர்ட்?

அதானி குழுமம் இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டியிருந்தாலும்கூட, முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பதால், நேற்று ஒரே நாளில் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 55,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதற்கான காரணம் என்ன..?
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘6.5% கோவிட் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு’

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விளைவுகளை அனுபவிக்கும் நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…
மக்கள் ஆட்சி: டென்ட் கொட்டாய் டைரீஸ்

ஆர்.கே. செல்வமணி இயக்கிய திரைப்படங்களில் வித்தியாசமானது ‘மக்கள் ஆட்சி’. பொலிட்டிக்கல் திரில்லர் என்றாலும் படம் முழுவதும் தெறிக்கும், சூடும் சுவையுமான வசனங்கள்தான் இந்தப் படத்தின் பெரும்பலம்.
தமிழக அரசியலில் இதுவரை நிகழ்ந்துள்ள பல்வேறு சம்பவங்களை, அரசியல் ஆசாமிகளை இந்தப் படத்தில் சரமாரியாகக் கிண்டலடித்துள்ளார்கள்.
பட்டாசு போல் தெறிக்கும் வசனங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையையும் இணைத்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். மணிவண்ணன் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்திற்கு நிகரானதாக இதைச் சொல்லலாம்.
படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களுடன் விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
நன்றி
Publisher: www.vikatan.com