நாடாளுமன்ற தேர்தல்: ஓபிஎஸ், டி.டி.வி நிலை என்ன..?
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளதன் மூலம் அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பிடி மேலும் வலுவாகி விட்டது.
இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் தரப்பின் நிலை என்னவாக இருக்கும்..? அ.தி.மு.க – பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்பது குறித்து பல்வேறு விதமான செய்திகள் அலசப்படுகின்றன.
இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…
இனி அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு!
நாகை மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில், அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பெரும்பாலான பள்ளி மாணவர்கள் காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து, இரண்டு மாணவர்கள் அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
காவிரி: கர்நாடக கட்சிகளின் ஒற்றுமை தமிழ்நாட்டில் இருக்கிறதா?!
கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன.
‘தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது’ என்று கர்நாடகாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்து ஒரே குரலில் ஒலிக்கின்றன.
ஆனால், அந்த ஒற்றுமை தமிழக கட்சிகளிடையே இருக்கிறதா..?
இது குறித்த அலசலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
தங்கம் வாங்க சூப்பரான நேரம்…
தங்க நகைகள் வாங்குவோர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 2% குறைந்துள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை ஏன் குறைந்து வருகிறது, தங்கம் விலை மேலும் குறையுமா ..?
இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…
அப்பா வாட்ச்மேன்… வறுமை… சந்திரயான் 3 திட்டக் குழுவின் இளைஞன் பரத் சாதித்த கதை!
சந்திரயான் 3, லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது.
அந்தவகையில், ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து இஸ்ரோவில் பணி கிடைத்து, சந்திரயான் 3 திட்டக்குழுவில் இடம்பிடித்த பரத்குமார் என்ற இளைஞரின் இந்த வெற்றிக்கான போராட்டம் பலரையும் ஈர்த்திருக்கிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கோயில் உண்டியலில் ரூ.100 கோடி ‘செக்’… ரகளையான க்ளைமாக்ஸ்!
ஆந்திர மாநிலத்தில் புகழ்மிக்க பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிம்மாசலம் எனப்படும் மலையில் அமைந்திருக்கும் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். .
இந்த ஆலயத்தில் இரு தினங்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் பணத்துக்கு நடுவே ஒரு காசோலை கிடைத்தது.
அதை எடுத்துப் பார்த்த அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை. காரணம் அந்தக் காசோலையில் நூறு கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
சிறை சென்ற 20 நிமிடங்களில் வெளிவந்த ட்ரம்ப் – நடந்தது என்ன?
ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற விவகாரம் தொடர்பாக ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
அமெரிக்காவில் 2020-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தார்.
அதன் பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க..
Flipkart-ன் ‘நோ ரிட்டர்ன் பாலிசி’: கோபத்தில் நெட்டிசன்கள்
ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்பவர்களுக்கு சில சமயங்களில் பொருள்கள் மாறி வருவதும், ஏமாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால், ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில், 76,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘எங்க அப்பா விவசாயியாவே தான் வாழ்ந்தார்!’ – நல்லாண்டியின் மகள் உருக்கம்
மத்திய அரசின் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கும், சிறந்த நடிப்புக்கும் என இரண்டு விருதுகளை தமிழ் படமான கடைசி விவசாயி பெற்றுள்ளது.
இப்படத்தில் தொழில்முறை நடிகர் அல்லாத உசிலம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த கிராமத்து மக்களே அதிகம் நடித்திருந்தனர். அதில் முக்கிய வேடத்தில் பெரியவர் நல்லாண்டி நடித்திருந்தார்.
இந்த நிலையில், தனது தந்தைக்கு விருது கிடைத்துள்ளது குறித்து அவரது மகள் அளித்துள்ள பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க…
நன்றி
Publisher: www.vikatan.com