“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்!
கடந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் (ஆகஸ்ட் 28) அவர் அந்த பதவிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தி உள்ள “இந்தியா’ ( I.N.D.I.A) கூட்டணியிலும் ஸ்டாலினின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டும், திமுக தலைவராக பதவிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டியும் அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவரித்துள்ள அவர், ” ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே பாஜக அரசு அலறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது” என அக்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
அவரது கடிதத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
நன்றி
Publisher: www.vikatan.com