நவம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 6,991 ஆம்னி பேருந்துகளில், 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவரவே… ரூ.18,76,700 வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால், இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும், ஆம்னி பஸ் கட்டணம் மிக அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நமது விகடன் வலைதளத்தில், கருத்துக்கணிப்பு நடத்தினோம். `தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை…” எனக் குறிப்பிட்டு, `மிக அதிகம்’, `கொஞ்சம் அதிகம்’, `சாதாரணமாகவே இருந்தது’ என மூன்று விருப்பத்தேர்வுகளைக் கொடுத்திருந்தோம்.
இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட வாசகர்கள், `தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை’ `மிக அதிகம்’ என 78 சதவிகிதம் பேரும், `கொஞ்சம் அதிகம்’ என 13 சதவிகிதம் பேரும், `சாதாரணமாகவே இருந்தது’ என 9 சதவிகிதம் பேரும் தங்கள் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com