அதோடு, `தமிழகத்துக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP – Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும்” எனவும் சீமான் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, சீமானின் வலியுறுத்தல் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை?’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `நியாயமானதே, தேவையில்லாதது, கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.
தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்…
நன்றி
Publisher: www.vikatan.com