தமிழ்நாடு விழுப்புரத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பிற்கான முழு விவரங்களும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களா நீங்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விழுப்புரம் சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.
இந்த வேலையில் மொத்தம் இரண்டு பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளது.
இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.
ALSO READ : பல்வேறு பணிகளை அறிவித்துள்ளது தென்காசி சமூக பாதுகாப்பு துறை
அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு நேர்காணலில் தேர்வாகும் நபர் விழுப்புரத்தில் வேலை வழங்கப்படும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
விழுப்புரம் மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 17,2024 அன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் இருந்து தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முகவரி :
The Director,
Directorate of Social Defence, No.300,
Purasaiwalkam High Road, Kellys, Chennai – 600 010.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும், அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும் Official Notification என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in