500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் வரும் ஜனவரி 22 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒருபுறம் ராமர் கோவில் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மறுபுறம் இதுபோன்ற தவறான தகவல்களும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
சோஷியல் மீடியாவில், `இப்போது 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டைக்குப் பதிலாக ஸ்ரீராம் மந்திர் படம் இருக்கும். ஜெய் ஸ்ரீ ராம்”… `புதிய 500 ரூபாய் நோட்டு. காந்தி ஒழிந்தார், இதற்கு மேல் அவரை மகாத்மா என அழைக்கத் தேவையில்லை’ எனப் பலர் குறிப்பிட்டு வருவதைக் காண முடிகிறது.
இது வெகுஜன மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com