இந்த பிரசாரத்தால், விவேக் ராமசாமிக்கு எதிப்பு கிளப்பியது. இதற்கிடையில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக விவேக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “நான் எனது இலக்கை அடையவில்லை. வெள்ளை மாளிகையில் எங்களுக்கு ஓர் அமெரிக்க தேசபக்தர் தேவை. மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்று சத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள். எனவே, நான் எனது பிரசாரத்தை இடைநிறுத்துகிறேன். மேலும், டொனால்டு ட்ரம்ப்பை ஆதரிக்கிறேன். அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com