சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ’40 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும். நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும்’ என சூளுரைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தது ஸ்டாலின்தான். இன்று அவர், ‘நாம் கைகாட்டுபவர்தான் பிரதமராக வரவேண்டும்’ எனச் சொன்னாரே தவிர, ‘ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்’ என சொந்தக் கட்சிக்காரர்களிடம் கூட சொல்லவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 15 தொகுதிகளுக்குக் குறையாமல் கூட்டணியில் சீட் பெற்றுவிடும் முனைப்பில் இருக்கிறது காங்கிரஸ் தலைமை. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும்பட்சத்தில், சீட் பங்கீட்டில் காங்கிரஸின் கை ஓங்கும். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான், காங்கிரஸ் தலைமைக்கு மெசேஜ் அனுப்பும்விதமாக, வி.பி.சிங்கின் சிலையை திறந்து, அந்தவிழாவுக்கு அகிலேஷ் யாதவ்வையும் அழைத்திருக்கிறார் முதல்வர்” என்றனர் விரிவாக.
தி.மு.க வட்டாரங்ளில் காங்கிரஸ் கட்சியின் மனக்குமுறல் குறித்து பேசினோம். “வி.பி.சிங்கின் சிலை திறப்பில் எந்த அரசியலும் இல்லை. சமூக நீதியின் காவலராக அடையாளம் பெற்ற ஒப்பற்ற தலைவர்தான் வி.பி.சிங். முதல்வர் கூறியதுபோல, தமிழகம்தான் வி.பி.சிங்கின் தந்தை வீடு. அவருக்கு இங்கே சிலை அமைப்பதுதான் சரியானதாக இருக்கும் என்கிற அடிப்படையில், அதற்கான முன்னெடுப்பை செய்திருக்கிறார் முதல்வர். தவிர, அன்றைய தினம் தன்னுடைய மகன் உதயநிதியின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை சிறப்பானதாக்க வி.பி.சிங்கின் சிலையைத் திறந்துவைத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம், சிலை அமைப்பதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்டபோது யாரும் மனமாச்சரியம் எழுப்பவில்லையே. இப்போது மனமாச்சரியங்கள் எழுவதாகச் சொல்வதெல்லாம், கூட்டணிக்குள் பிளவை உருவாக்க நினைக்கும் சில சக்திகளின் வேலை” என்றனர்.
வி.பி.சிங்கின் சிலை திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் சென்றும், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. ‘எந்த மனமாச்சரியமும் இல்லை’ என தி.மு.க தரப்பில் சொன்னாலும், சங்கடங்களால் நெளியத் தொடங்கியிருக்கிறது கதர் வட்டாரம். தேர்தல் நெருங்கும் வேளையில், சங்கடங்கள் சாந்தமாகுமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com