ஆரம்பத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் புதினும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் சில குற்ற சம்பவங்களுக்காக சிறை சென்ற யெவ்ஜெனி ப்ரிகோஜின் பின்னர் ஹோட்டல் தொழிலில் ஆர்வம் காட்டினார். பின்னாள்களில் “புதினின் செல்ல சமையல்காரர்’ என்ற பெயரையும் பெற்றார். இந்த வார்னர் குழு, புதினின் சொந்த தனியார் ராணுவம் என்றும், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கி அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் சொல்லாப்படுகிறது.
சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள் காரணமாக, ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாமல் போகும் சட்ட விரோத நடவடிக்கைகளை இந்த வாக்னர் குழு மூலம் புதின் செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரிலும் கூட ரஷ்யா ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை வாக்னர் ஆயுதக் குழுவினர் விளாடிமிர் புதினுக்காக செய்துள்ளது.
இக்குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். மேலும் ஆயுதங்கள் இன்றியும் தனித்து போரிடும் திறனும் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைமென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும் இந்த குழுவினர், `கொடூர கொலைக்காரர்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர். புதினுக்கு நெருக்கமான இருந்த வாக்னர் குழு, உக்ரைன் போரின் போது, பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com