“மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வெள்ளை உடையில்தான் இருக்கிறது… ஆனால் ஆளுநர் காவி படத்தை போட்டு சனாதன துறவி என்கிறாரே!”
“1959-ல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய விபூதி இருந்ததே… ருத்ராட்சம் இருந்ததே… இந்து மகான் மாதிரி தோற்றம் அளித்தாரே… அப்படித்தான் தி.மு.க தற்போது படம் வைத்திருக்கிறதா… எங்களை பொறுத்தவரை திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர்தான். திருக்குறள் உலகப் பொதுமறை இல்லை… இந்து இலக்கியம். ஏழுபிறவி, ஊழ்வினை உள்ளிட்ட பல்வேறு குறள்கள் இந்து மத நம்பிக்கைகளில் மட்டுமே வருகிறது. இதுபற்றிய பொதுவிவாதத்துக்கு நான் தயார்”
“ஜல்லிக்கட்டை சனாதன திருவிழா என பா.ஜ.க சொல்கிறதே!”
“ஜல்லிக்கட்டு சனாதனம்தான். இந்து மத விளையாட்டுதான். கோயில் திருவிழாவோடு சம்பந்தப்பட்டதுதான் ஜல்லிக்கட்டு. எத்தனை இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் காளை அடக்குகிறார்கள்? இந்து மதத்தினரை தவிர வேறு யாரும் மாடு வளர்ப்பதில்லையே, எனவே ஜல்லிக்கட்டு இந்து சனாதன திருவிழாதானே”
“கூட்டணி முறிந்துவிட்டாலும் அ.தி.மு.க-வோடு மென்மையானப் போக்கை கடைபிடிக்க காரணமென்ன?”
“வாக்குகள் சிதறிவிடக் கூடாதென்றே நாங்கள் கருதுகிறோம். ஆனால் இதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வந்தால் அவர்களுடன் கூட்டணி வைப்போம். அவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே வெல்வோம்”
“மோடி தமிழகம் வந்த நாளில் காயத்ரி ரகுராம் அ.தி.மு.க-வில் இணைகிறாரே!”
“நல்லதுதான் போகட்டுமே. அரசியல் என்றாலே கட்சி மாறுவது இயல்புதானே… சித்தாங்களை மாற்றி அமைப்பது சகஜம்தான். சிலர் சின்ன சின்ன காரணங்களுக்காக கட்சி மாறுவார்கள். இவர் ஏன் மாறினார் எனத் தெரியவில்லை. `மோடி தமிழகம் வந்த நாளில் அ.தி.மு.க-வுக்கு வந்தார் என்பது மொட்டை தலைக்கு முழங்காலுக்கு முடிச்சு போடுவதுதான். அதனால் எந்த பாதிப்பும் இல்லை”

“2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க யாருடன் கூட்டணி?”
“இதுகுறித்து எங்கள் தேசிய தலைமை முடிவெடுக்கும்; ஆகவே இதற்கு நான் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com