மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், பள்ளி ஆள்சேர்ப்பு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கைதாகியிருக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பெயரும் அடிபடுகிறது.
இத்தகைய சூழலில் திரிணாமுல் மூத்த அமைச்சரொருவர், தங்களின் அமைச்சர்கள் சிலர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்காக கட்சியே ஊழல் கட்சி என்று அர்த்தமல்ல என்று கூறியிருப்பது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சொந்த கட்சியிலிருந்தே எதிர்ப்புக்குள்ளாகியிருக்கிறது.
முதல்வருக்கு நெருக்கமானவராக அறியப்படும் மூத்த அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், “ஆம், ஊழலில் ஈடுபட்ட சிலர் கட்சியில் இருக்கின்றனர். அதனால், ஒட்டுமொத்த கட்சியும் ஊழல் கட்சி என்று அர்த்தமல்ல. ஆள்சேர்ப்பு முறைகேட்டில் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் பாவிகளே. அப்படிப்பட்ட பாவிகள் வேலையில்லாத இளைஞர்களிடம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்குவதை விட தங்களின் தாயின் இறைச்சியை உண்ணலாம்” என்று நேற்று கூறியிருக்கிறார். இவர், மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும், கொல்கத்தா மேயராகவும் இருக்கிறார்.
ஃபிர்ஹாத் ஹக்கீமின் இத்தகைய கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், “ஊழல் நடக்கும் போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்… அப்போது ஏன் அமைதியாக இருந்தார்… சிலர் மிகவும் நேர்மையானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் இந்த முயற்சி கேலிக்கூத்தானது” என்று கூறினார்.
மேலும், பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் கோஷ், ஹக்கீமின் கருத்தானது லோக்சபா தேர்தலுக்கு முன் மாநில மக்களை முட்டாளாக்கும் தந்திரம். ஊழல் நடக்கும் போது, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பங்குகளை எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இப்போது, தேர்தலுக்கு முன்னால் அவர்கள் எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்கிறார்கள்” என்று சாடினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com