“கோயம்பேடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சி.எம்.டி.ஏ கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நகரின் மையப்பகுதி… சென்னை – திருச்சி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் பகுதி என அதன் அமைப்பே பெரியளவில் வணிகத்துக்குச் சிறந்ததாக இருக்கும்” எனப் பேசத் தொடங்கினார் சி.எம்.டி.ஏ-வில் உள்ள சீனியர் அதிகாரி ஒருவர். மேலும் தொடர்ந்தவர், “கோயம்பேடு பகுதியில் மிகப்பெரிய வணிக வளாகத்தைக் கட்டும் திட்டத்தில் அரசு இருக்கிறது. அதில் விளையாட்டு அரங்கங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு வசதிகளும் இருக்கும் வகையில் வடிவமைக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றையும் தனியார் நிறுவனங்களுக்கு நிகராகக் கட்டும் எண்ணமும் இருக்கிறது. தொழில் நகரங்கள் எல்லாம் நகருக்கு வெளியிலேயே இருக்கின்றன. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் மிகப்பெரிய ஐ.டி பார்க் அமைக்கும் எண்ணமும் அரசிடம் இருக்கிறது” என்றவர்…
“மேற்சொன்ன விஷயங்களில் ஏதாவது ஒன்று அமையும். எதைச் செய்தால் சரியாக இருக்குமோ அதையொட்டி திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.
மக்களின் மிக முக்கியமான பயன்பாட்டு இடமாக இருந்த கோயம்பேடு, எதிர்காலத்திலும் மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும். அரசின் திட்டம் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
நன்றி
Publisher: www.vikatan.com