கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம். தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மண்டல வாரியாகப் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்த கட்ட பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த கூட்டத்தில் கூறப்பட்டது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக் கூடிய அளவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். சேலத்தில் நடைபெறக் கூடிய இளைஞரணி மாநில மாநாட்டைச் சிறப்போடும் எழுச்சியோடும் நடத்திக் காட்ட வேண்டும்.
தமிழக முதலமைச்சர் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது 2007-ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடந்தது. வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறேன். காலை 9 மணி அளவில் மகளிரணிச் செயலாளர் – கனிமொழி கழகத்தின் கொடியை ஏற்றி வைக்கிறார்கள். மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். தலைவர் மாலை 6 மணிக்குச் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கிட்டத்தட்ட 5 லட்சம் கழக, இளைஞரணித் தோழர்கள் வருவார்கள். இந்த இளைஞரணி மாநாடு கழக வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாடு வரலாற்றிலும் – இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமையப் போகிறது. அடுத்து வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குச் சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையப் போகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com