ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை!
திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று ஏகத்துக்கும் பிரச்னை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பிரச்னை உச்சக்கட்டத்தை எட்ட மாவட்டச் செயலாளர் அப்துல் வாஹப் மாற்றப்பட்ட சம்பவமும் நடந்ததது. இருந்தபோதிலும் மேயர் விவகாரம் பெரிதாகச் சமீபத்தில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டுச் சரிசெய்தார்.


என்னதான் சரிசெய்தாலும், அந்த உட்கட்சி பூசல் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்ற வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு நிலவும் பிரச்னைகளைப் பட்டியலிட்டுச் சொன்னார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட தலைமை, பொறுப்பு அமைச்சர்களுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் பேசி ஒரு முடிவு சொன்னது. அதோடு, இந்த முறை தலைமை சொல்லும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவேண்டும். இல்லையென்றால் இருக்கும் பதவி நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கறாராகச் சொல்லிவிட்டது.


வரும் பிப்ரவரி 5-ம் தேதிவரை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். 40 தொகுதிகளில் இதுவரை நடந்து முடிந்த 14 தொகுதிகளில் பல உட்கட்சி பிரச்னைகள் வெடித்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் மீதமுள்ள மாவட்டங்களில் என்ன என்ன பஞ்சாயத்து கிளம்பக் காத்திருக்கிறதோ என்கிறது அறிவாலய வட்டாரம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com