பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது சிவில் சட்டம் பாக்கி இருக்கிறது. அதை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவேற்றிவிட பா.ஜ.க யோசித்துவருகிறது என்றும், வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அதற்கு தேவையான நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொள்ளும் என்ற பேச்சும் அடிபடுகிறது. எல்லாம் திக் திக் விவகாரங்களாகவே இருக்கின்றன.
இதனிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் குறிப்பாக, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தின் அஜெண்டா குறித்து கேள்வி எழுப்பி இருந்ததும் கவனிக்கத்தக்கது.!
நன்றி
Publisher: www.vikatan.com