`ஆந்திர அரசியலை பொறுத்த வரையில் ஜெகன் தனித்தே களம் காணுவார். பாஜக-வுக்கும் ஜெகனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மத்தியில் பாஜகவின் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தவர் ஜெகன். இதனால், தேர்தலுக்கு பின், பாஜக-வுக்கு ஜெகனின் ஆதரவு வேண்டும் என நினைக்கலாம். ஆனால் பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா என கூட்டணி அமைத்தால், ஜெகனின் ஆட்சியை கடுமையாக விமர்சிக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு வரலாம். அதே போல, ஜெகனை விமர்சிப்பதில் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதில் பவன் கல்யாணுக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் என்ற கருத்துகளும் உலவுகிறது. எது எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் `இந்தியா’ கூட்டணி வலுவாக ஒற்றுமையாக இருப்பதும், மறுபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுவதும், தேசிய அளவில் அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த தான் செய்யும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com