ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை வேந்தர்களையும் சமாளித்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் நிர்வாக ரீதியில் உயர்கல்வித்துறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. முதலாவது பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 425 என ஒட்டுமொத்தமாக 13 பல்கலைக்கழகங்களில் 1,265-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
மேலும், அரசு கல்லூரிகளில் 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கிறது. இதை சமாளிக்க கவுரவ விரிவுரையாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுவும் ராஜகண்ணப்பனுக்கு பெரிய தலைவலியாக அமையும்.” என்றனர் விரிவாக.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத் துறையை ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின். துறையில் ஏற்பட்ட குழப்பம், அமைச்சர் மீதான புகார்கள் கட்டுக்கடங்காமல் ஏகிறவே, ராஜகண்ணப்பன் துறையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். அரசு அதிகாரி ஒருவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகாரும் இருக்கிறது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பு ராஜகண்ணப்பன் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஆளுநரையும் அவரது அரசியல் கணைகளையும் எதிர்கொள்ளவேண்டும். ராஜகண்னப்பனுக்கு கிடைத்திருக்கும் இந்த கூடுதல் பொறுப்பு ஒரு மூள் கிரிடம்தான். அதை ஏற்று சமாளிப்பாரா ராஜகண்ணப்பன்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com