இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி ஆளுநரின் நோக்கமே தவறாக இருக்கிறது. வரலாறு காணாத பெருமழை பொழிந்து மக்கள் கஷ்டப்படும்போது, ஆளுநர் எங்கே போனார்? தனது மாளிகையை இறுக பூட்டிக் கொண்டு இருந்தார். தற்போது ஆளுநருக்கு எதிராக வழக்கில் நீதிபதிகளின் அறிவுறுத்தலையடுத்து, நிவாரண பணிக்காக களத்தில் இருக்கும் முதல்வரை சந்திக்க அழைப்பு விடுவது கேவலமான அரசியல். இப்போதுகூட களத்தில் இருக்கும் முதல்வரை வேலை செய்யவிடாமல் தடுக்கதான் ஆளுநர் இதுபோன்ற நாடகம் ஆடுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஆளுநரின் இந்த தந்திரம் ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது. ஆளுநர் குறித்த முடிவை முதல்வரே எடுப்பார்.’ என்றார் சூடாக.


இதுதொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசும்போது, “சமீபத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் பரிசீலனையில் எடுத்திருந்தால், அரசின் கோபம் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால், அதை அப்படியே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, தனது ஈகோவை காட்டியிருக்கிறார் ஆளுநர். ஒருவேளை மசோதாக்களை ஆளுநர் தன்வசம் வைத்திருந்தால், சந்திப்புக்கு முதல்வர் ஏற்பாடு செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தில் அறிவுறுத்தலால், நிர்பந்தம் ஏற்பட்டு முதல்வருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஆளுநர். அதுவும் சரிவர அழைப்பு விடவில்லை. ஆளுநரின் அழைப்பை ஏற்கும் மனநிலையில் முதல்வரும் இல்லை என்று தான் தெரிகிறது.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com