டெல்லி அருகே காஜியாபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் அந்த 19 வயது, பெண் காவலாளி. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பணி நிமித்தமாக ஹவுசிங் சொசைட்டிக்கு அருகாமையில் தனது உறவினருடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, இந்த இளம் பெண், தனது கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து மோசமான உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்று பலியானார்.
இந்த கொடூர சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட அஜய் (32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“இந்த குற்றம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சக ஊழியர்கள் அப்பெண்னை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.” என்கிறார்கள் போலீஸார்.
சொசைட்டியின் அடித்தளத்தில் மூன்று நபர்களால் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இந்த கோர சம்பவத்தால் மன விரக்தி அடைந்த அப்பெண் விஷம் அருந்தியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால், காவல்துறை துணை ஆணையர் விவேக் சந்த் யாதவ் கூறுகையில், “பாலியல் வன்கொடுமை பிரிவு 376 கீழ் முதல் தகவல் அறிக்கையினை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்படவில்லை. சொசைட்டியின் அடித்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்கள் எதுவும் பதிவாகவில்லை” என தெரிவித்தார். மேலும், அவர் விஷம் அருந்தியதில் இறந்தாரா என்பதை ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் காவலர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com