மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது, இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருக்கும்பட்சத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகையைப் பொறுத்தவரை இப்போது 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 15ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் வரும் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று தெரிகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com