2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரானது சென்னை , டெல்லி, அகமதாபாத், மும்பை உட்பட பல்வேறு மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் இந்த தொடரில் மோதவுள்ளனர்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மொத உள்ளனர். முன்னதாக இந்த போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அக்டோபர் 14 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Also Read : ரெடி கவுன்டவுன் ஸ்டார்ட் பண்ணலாமா..? விண்ணில் பாய தயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம்..!
இதேபோன்று அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில் 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in