யாரேனும் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்தை கடக்க நேரிட்டாலோ அல்லது ஏதும் பேரணி நடைபெற்றால் மட்டுமே மாநகராட்சி சார்பில் பொடி தூவிவிட்டு செல்வார்கள். ஆனால் இச்செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. அத்தோடு இலவச கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் பேசின்கள் உடைந்தும், பராமரிப்பு இன்றியும், அதனை சுத்தப்படுத்தாது மிக மோசமாக துர்நாற்றம் வீசும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இதற்கு எடுத்தபாடில்லை.
பேருந்து நிலையத்தில் புதிய தூய்மையான இலவச கழிப்பறைகள், காத்திருக்கும் அறைகள், தூய குடிநீர் இவை மூன்றையும் உடனே வழங்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர். இப்படி திறந்தவெளி சிறுநீர் கழித்தலை திண்டுக்கல் மாநகராட்சி தடுக்க வேண்டும். இல்லையெனில் திறந்த வெளி சிறுநீர் கழித்தலை மாநகராட்சி நிர்வாகமே ஊக்குவித்தது போலாகிவிடும் என பயணிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் அவர்களிடம் பேசினோம். “திறந்தவெளியில் சிறுநீர் கழித்தல் என்பது சுற்றுப்புறத்திற்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனால் தான் அரசாங்கமே திறந்தவெளியில் சிறுநீர் கழித்தலை ஒழிப்பதற்காக கழிப்பிடங்களை கட்டித் தந்திருக்கிறது. பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இலவச கழிப்பிடங்கள் மாநகராட்சி சார்பில் கட்டி தரப்பட்டுள்ளது, இன்னும் கூடுதலாக இலவச கழிப்பிடங்கள் தேவைப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படுவதாக” தெரிவித்தார்.
மேலும், `பயணிகள் குறிப்பிடுவது போல பயன்படுத்த முடியாத, சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பறைகளை உடனே விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவன செய்வதாகவும்’ கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், `பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் “இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது” என்ற தகவல் பலகையும், அத்தோடு அங்கு சிறுநீர் கழிக்க இயலாதவாறு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்வதாகவும், திண்டுக்கலை தூய்மையான மாநகராட்சியாக மாற்ற மக்களும், பயணிகளும் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், அதற்கு மாநகராட்சி நிர்வாகம் முழு ஆதரவு அளிப்பதாகவும்’ மேயர் தெரிவித்தார்.
அரசு இது போன்ற சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ற போதும், பொது மக்களும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்விரண்டும் இணையும் இடம் தான், முழுமையான தீர்வுக்கான இடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com