பொதுவாக காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அந்த சிக்கல்களை அனைத்தையும், தாண்டி, வாழ்வில் வெற்றி பெற்றால் தான் அவர்களின் வாழ்க்கை முழுமை அடைந்ததாக கருதப்படும். அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தின், கொச்சின் அருகே, இருக்கும் கடம்பக்குடியை பூர்வீகமாகக் கொண்ட நிஜோ, சில்பா தம்பதியினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தமதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதோடு, தம்பதிகள் இருவருக்கும் வேலை இல்லாததால், குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, பல்வேறு தரப்பினரிடமும், கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர் இந்த தம்பதிகள்.
ஆனால், அந்த கடன் தொகையே அவர்களை ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தை விட்டு அனுப்பி விட்டது என்பதுதான் மிகவும் துயரமான செய்தியாக இருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் இணையதளத்தின் மூலமாக பல்வேறு நிறுவனங்கள் கடன் தருகிறோம் என்ற பெயரில், முதலில் கடனை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர்கள் நெருக்கடியாக இருக்கும் நேரத்தில், அவர்களின் குரல்வலையை நெரிக்கும் சம்பவமும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்பதே துயரமான செய்தியாக இருக்கிறது.
அந்த வகையில், இணையதள விளம்பரத்தில் பார்த்த ஏதோ ஒரு நிறுவனத்திடம் கடன் பெற்று, அந்த கடனை அடைக்க முடியாமல் தம்பதிகள் இருவரும் திணறி வந்துள்ளனர். இவர்கள் குடும்ப பிரச்சனை மற்றும் கஷ்டம் போன்றவை காரணமாக, அந்த கடனை அடைக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே கடன் கொடுத்த நிறுவனம் நிஜோவின் புகைப்படத்தை மிகவும் ஆபாசமாக மாபிங் செய்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், அவருக்கு மட்டும் அல்லாமல், அவருடைய மனைவிக்கும் இது மாபெரும் அவமானமாக மாறியது.
இந்த அவமானத்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த தம்பதிகள், கூனி,குறுகி போயினர். இந்த அவமானத்திலிருந்து எப்படி வெளியே வருவது? என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அந்த தம்பதிகள், ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, காதல் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டனர். பின்பு மறுநாள் காலை வெகு நேரம் ஆன பிறகும், அவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உட்புறமாக தாழ்விடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணமாக தூக்கில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதேபோல இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அதன் பிறகு நான்கு பேரின் உடலையும் மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com