அமெரிக்க நாட்டில், ஒரு இளம் பெண் அவருடைய தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரை துட்சமென மதித்து, தன் உயிரை தியாகம் செய்து, தாய் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், படித்து வந்த ஏஞ்சலினா டிரான் (21) என்ற இளம் பெண் தன்னுடைய தாய் மற்றும் அவருடைய இரண்டாவது கணவருடன், சியாட்டில் நகரில் வாசித்து வந்தார். தாயின் இரண்டாவது கணவர் சென்ற வருடம் வரையில் வியட்நாமில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சென்ற வருடம் வியட்நாமில் இருந்து, அமெரிக்கா நாட்டிற்கு திரும்பிய தாயின் இரண்டாவது கணவருக்கும், தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகவே அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு அந்த இளம் பெண்ணின் தாய் முயற்சி செய்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான், இருவருக்கும் திடீரென்று கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, இரண்டாவது கணவர், அந்த இளம் பெண்ணின் தாயை கடுமையாக தாக்கி இருக்கிறார்.
அப்போது அறையில் இருந்த ஏஞ்சலினா டிரான், பதற்றத்தோடு ஓடி வந்து, தாயை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். அந்த சமயத்தில், அந்த தாயின் இரண்டாவது கணவர் கத்தியை எடுத்து குத்திய போது, தாயை காப்பாற்ற குறுக்கே பாய்ந்து தன் உயிரை விட்டார் அந்த இளம் பெண்.
அதோடு, அந்த இளம் பெண்ணின் மீது 107 கத்தி குத்துகள் இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த இளம் பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் துறைக்கு தகவல் வழங்கினார்.
இது குறித்து, விரைந்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதாவது, கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்த காவல்துறை, மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றது.
நன்றி
Publisher: 1newsnation.com